நெத்திலி கருவாடு தொக்கு - கிராமத்து ஸ்டைல் ரெசிபி!

தினத்தந்தி

சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட நெத்திலி கருவாடு தொக்கு என்றால் அதற்கு இணையான சுவை வேறு இல்லை. குறைந்த நேரத்தில் எளிதாக செய்யக்கூடிய இந்த ரெசிபி, கார சுவையை விரும்புவோருக்கு மிக பிடிக்கும்.

தேவையான பொருட்கள்: நெத்திலி கருவாடு 100 கிராம், தக்காளி – 4 (நறுக்கியது), சின்ன வெங்காயம் – 100 கிராம், பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 1, இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – ½ தேக்கரண்டி, நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவையான அளவு

செய்முறை : நெத்திலி கருவாட்டை 2 -3 முறை நன்றாக கழுவி சுத்தம் செய்து, தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

பின்னர் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளி சேர்த்து குழைய விடவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மசாலாவை நன்றாக வதக்கவும்.

இப்போது கருவாட்டை சேர்த்து கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சுமார் 10 நிமிடம் வேகவிடவும்.

கெட்டியான பதம் வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால், சுவையான நெத்திலி கருவாடு தொக்கு தயார்.

குறிப்புகள்: கருவாடு உப்பாக இருக்கும், அதனால் உப்பு அளவை கவனமாக சேர்க்கவும்

மதுரை ஸ்பெஷல் பருத்திப்பால்!