மதுரை ஸ்பெஷல் பருத்திப்பால்!

தினத்தந்தி

தேவையான பொருட்கள்: பருத்தி கொட்டை – 2 கப், வெல்லம் – 1½ கப், பச்சரிசி – ¼ கப், ஏலக்காய் – 5, சுக்கு – ஒரு சிறிய துண்டு, தேங்காய் – 1 கப் ஆகியவை.

செய்முறை :பருத்தி கொட்டைகளை நன்றாக கழுவி, இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில், ஊறவைத்த கொட்டைகளை மிக்சியில் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

அரைத்த கலவையை பிழிந்து பருத்திப் பாலை எடுத்து வைக்கவும். (2 முறை பிழிந்து எடுத்தால் நல்ல கனம் கிடைக்கும்)

பச்சரிசியை தனியாக ஊறவைத்து, மையமாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி தயாராக வைத்துக்கொள்ளவும்.

ஒரு கனமான பாத்திரத்தில் பருத்திப் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து கிளறத் தொடங்கவும்.

பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அரைத்த பச்சரிசி மாவை சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, கட்டி ஆகாமல் கவனமாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

பால் ஓரளவு கெட்டியாகும் போது, தயாராக வைத்துள்ள வெல்லப் பாகை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இறுதியாக ஏலக்காய், சுக்கு பொடி மற்றும் தேங்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

மாலை நேர சிற்றுண்டி: ருசியான பூசணிக்காய் கட்லெட்!