Subash T
சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழுவாள். எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள். எதாவது பேசிக்கொண்டே இருப்பாள் என பெண்ணை தங்கள் கணவன்மார்களோ அல்லது குடும்பத்தினரோ கூறுவர். இதனால் பெண் மிகவும் உணர்ச்சிமிக்கவள் என அனைவரிடமும் ஒரு பொதுக்கருத்து நிலவியுள்ளது.
ஆனால் அது உண்மையல்ல. பெண்போல ஆணும் உணர்ச்சியுள்ளவனே. பாலினம் என்பதை பார்க்கமால் இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
இங்கு குறிப்பிட்டு பார்க்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை உடனே வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் தங்களுக்கென்று சமூகத்தில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி உணர்ச்சிகளை அனைவரது முன்பும் வெளிப்படுத்தமாட்டர்கள்.
இதனாலேயே பெரும்பாலும் பெண்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என நாம் கூறுகிறோம். மேலும் இங்கு எதனால் பெண் உணர்ச்சிவசப்படுகிறாள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை, சமூகம் அவர்களை செய்ய வைத்திருக்கும் வேலை, கலாச்சார எதிர்பார்ப்புகள் இவையனைத்துமே ஒரு பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.
குழந்தை, சிறுமி, இளம்பெண், மனைவி என ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் உணர்வுகளை வெவ்வேறு விதமாக வெளிக்காட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் அவர்களாக இருக்க சமூகம் அனுமதிப்பதில்லை.
இளம்பெண் என்றால் விளையாடக்கூடாது, இதுபோல உடையணியக்கூடாது, இதை செய்யக்கூடாது, இவர்களுடன் பேசக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள். தங்கள் சுதந்திரம் அனைத்தும் அடைக்கப்படும்போது அந்த உணர்ச்சிகள் வேறுவிதமாக வெளிப்படும்.
தான் அம்மாவாகப்போவதை நினைத்து சந்தோஷத்துடன் பெண் இருப்பாள். ஆணும் அப்படித்தான் இருப்பான். ஆனால் பெண்ணுடைய உணர்வை மட்டும் இங்கு வெளிப்படுத்துவோம்.
அன்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெண் உடனே தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவாள். சத்தமாக சிரிப்பது, பூரிப்படைவது, அன்பு கிடைக்காதபோது அதிகம் ஏங்குவது, என சூழ்நிலைக்கு ஏற்ப வெளிப்படும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள்.
ஆனால் ஆண் எப்போதும் அனைத்து உணர்வுகளைவும் மனதுக்குள்ளேயே அடக்கிகொள்வான். வெகு சில நேரங்களிலேயே ஆண்கள் அழுவதை பார்க்கமுடியும். இதுபோன்ற காரணங்களால்தான் பெண்கள் அதிக உணர்ச்சிமிக்கவர்கள் எனக் கூறுகிறோம். ஆனால் ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது.