டபுள் பீன்ஸில் என்னென்ன நன்மைகள் உள்ளது தெரியுமா?

Subash T

டபுள் பீன்ஸ் (Double Beans) புரதம், நார்ச்சத்து, மற்றும் கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவுப்பொருள்.

இதில் உள்ள அதிகப்படியான புரதம் மற்றும் நார்சத்து உடல் எடையை நிர்வகிக்கவும், வயிற்றை நிறைவாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் பினோலிக் அமிலங்கள் உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன.

இதில் உள்ள நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொழுப்பைக் குறைத்து, இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், டபுள் பீன்ஸ் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

இதில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும், அவற்றை வலுவாக்கவும் உதவுகிறது.

டபுள் பீன்ஸை வேகவைத்து சுண்டலாகவோ, அல்லது குழம்பு மற்றும் கிரேவிகளில் சேர்த்து சப்பாத்தி, தோசையுடன் உட்கொள்ளலாம்.

அன்றாட உணவில் ஏன் செள செள சேர்க்க வேண்டும் தெரியுமா?