மாங்கொட்டையில் இவ்வளவு நன்மைகளா?

தினத்தந்தி

மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு பெரும்பாலானோர் மாங்கொட்டையை தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால் மாங்கொட்டையிலும் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மாங்கொட்டையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.

மாங்கொட்டை பருப்பில் உள்ள பினோலிக் கலவைகள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. செரிமானக் கோளாறு மற்றும் அசிடிட்டி பிரச்சினைகளுக்கு இது உதவக்கூடும்.

மாங்கொட்டை பருப்பை உலர்த்தி தூளாக்கி உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற உதவுகிறது.

இந்த தூள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்.

ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது.

ஒரு டீஸ்பூன் மாங்கொட்டை தூளை வெதுவெதுப்பான நீர், தேன் அல்லது எலுமிச்சை சாறுடன் கலந்து பருகலாம். இது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கக்கூடும்.

மாங்கொட்டை பருப்பு தூளில் உள்ள வைட்டமின் சி, உடல் நலத்தை மேம்படுத்துவதோடு இதய நோய் அபாயத்தையும் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் புளிப்பாக சாப்பிடலாமா?