தினத்தந்தி
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீர் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி மற்றும் குமட்டல் உணர்வும் ஏற்படலாம்.
இதனால் மாங்காய், நெல்லிக்காய் போன்ற புளிப்புப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கும்.
அளவோடு சாப்பிடும்போது புளிப்புப் பொருட்கள் வாய்க்கு இதமாக இருக்கும். குமட்டல் உணர்வையும் குறைக்க உதவும்.
ஆனால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
எதுக்களிப்பு மற்றும் செரிமானக் கோளாறுகளும் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே அளவோடு மட்டுமே சாப்பிட வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைபாடு காணப்படும். இதனால் சிலருக்கு சாம்பல் சாப்பிடும் ஆசை ஏற்படலாம்.
சாம்பல் போன்ற உணவல்லாத பொருட்களை சாப்பிடக் கூடாது. இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
அதேபோல் உப்பு மற்றும் காரம் அதிகமுள்ள ஊறுகாய்களையும் தவிர்க்க வேண்டும். அதிக உப்பு உயர் ரத்த அழுத்த அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.