உடம்பெல்லாம் ஒரே வலியா.. எலும்புகள் பலவீனமா..? உடனே இதை செய்யுங்க!

தினத்தந்தி

உடலெல்லாம் வலி, எலும்புகள் ஸ்ட்ராங்காக இல்லை என்றாலே, வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புண்டு. இந்த வைட்டமின் டி சத்து, எலும்புகளுக்கு உறுதியையும், பலத்தையும் கொடுக்க உதவியாய் இருக்கிறது.

credit: freepik

ஒரு கட்டிடத்தின் பலத்துக்கு எப்படி இரும்புக்கம்பியும், சிமெண்டும் முக்கியமோ, அதுபோல நமது உடலின் பலத்துக்கு கால்சியமும், பாஸ்பரஸ்சும் மிகமிக முக்கியம்.

credit: freepik

மேலும் எலும்புகளை உறுதியாக்குகிறது. உடலில் எதிர்ப்புச்சக்தியை அதிகமாக்க உதவி செய்கிறது. உடல் தசைகளை உறுதியாக்க உதவுகிறது. பற்கள் உறுதியாக இருக்க உதவி செய்கிறது.

credit: pixabay

மிகவும் குறைவான உணவுப் பொருட்களிலேயே வைட்டமின் டி சத்து இருக்கிறது. பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களில் இருந்து வைட்டமின் டி சத்து கிடைக்கிறது.

credit: pixabay

மேலும் சோயா பால், பாதாம் பால், ஓட்ஸ் கஞ்சி, முட்டை மஞ்சள் கரு, காளான்கள், ஆரஞ்சுப் பழச்சாறு ஆகியவைகளில் வைட்டமின் டி சத்து அடங்கியிருக்கிறது.

credit: pixabay

இவையெல்லாவற்றையும் விட, எந்தச் செலவும் இல்லாமல் இயற்கையாக, நமக்கு வைட்டமின் டி சத்து நம் கண் முன்னேயே கிடைக்கிறது. அது என்ன தெரியுமா? அதுதான் சூரிய ஒளி.

credit: pixabay

உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இல்லையென்றால், உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்ஸின் அளவும் குறைந்துவிடும். இதனால், உடல் எலும்புகள் மிகவும் அடர்த்தியாக, மிகவும் உறுதியாக இல்லாமல், நனைந்து போன பேப்பரைப் போல் எலும்புகள் வளைந்துவிடும்.

credit: pixabay

வைட்டமின் டி குறைபாட்டினால் எலும்பில் ஏற்படும் இந்த நோய்க்கு ஆஸ்டியோபோரோஸிஸ் அதாவது எலும்புப் புரை என்று சொல்லப்படுகின்றது. இந்த நோய் ஏற்படாமலிருக்க வைட்டமின் டி யுடன் கால்சியமும் சேர்ந்து, எலும்பைப் பாதுகாக்கிறது.

credit: pixabay
யு19 உலகக்கோப்பை: இந்தியா சாம்பியன்!