தினத்தந்தி
16-ஆவது இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது.
இதில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நேற்று நடைபெற்றது.
இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவர் 80 பந்துகளில் 175 ரன்கள் (15 பவுண்டரி, 15 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது.
அதன்பின் களம் இறங்கிய இங்கிலாந்து, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் கலெப் பால்கனர் அபாரமாக விளையாடி 67 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
சிறப்பாக விளையாடிய 14 வயது இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.