ஸ்மார்ட்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்..மேலும் நீலநிற ஒளி கண்களில் உள்ள ரெட்டினாவை சேதப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது..இந்த நீல ஒளி உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களுக்கு இடையூறை ஏற்படுத்திவிடும்..இரவு தூக்கம் தடைபடுவதால் சோர்வு மட்டுமல்ல இதய நோய், எடை அதிகரிப்பு, மன அழுத்தம், பதற்றம் உள்பட பல வகையான சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்..குழந்தைகள், டீன் ஏஜ் வயதினரின் மனநலத்தை பாதிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது..தூங்கும்போது செல்போன் அருகிலோ, தலையணைக்கு அடியிலோ வைத்துக்கொள்வது ஆபத்தானது..ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மாணவர்கள் தூக்கமின்மை மற்றும் மனநல பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.Explore