சுவையான பலாப்பழ கருப்பட்டி தேங்காய் பர்பி!

Photo: MetaAI
தேவையான பொருட்கள்: பலாச்சுளை - 1 கப், கருப்பட்டி - 3/4 கப், துருவிய தேங்காய், நெய் - தேவையான அளவு
Photo: MetaAI
செய்முறை: முதலில் பலாச்சுளைகளை கொட்டை நீக்கி எடுத்துக்கொள்ளவும். அதை மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும்.
Photo: MetaAI
ஒரு பாத்திரத்தில் சுத்தமான கருப்பட்டியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு பதத்துக்கு காய்ச்சவும்.
Photo: MetaAI
வாணலியில் நெய் ஊற்றி, தேங்காய் துருவலை நன்கு வறுத்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை கலவையை கொட்டி நன்கு கிளறவும்.
Photo: MetaAI
கருப்பட்டி பாகை வடிகட்டி இதில் சேர்த்துக் கொள்ளவும். அவ்வப்போது நெய் ஊற்றி கிளற வேண்டும்.
Photo: MetaAI
எல்லாம் சேர்ந்து நன்கு வெந்து சுருண்டு வரும்போது, நெய் தடவிய தட்டில் ஊற்றி பர்பிகளாக துண்டு போடவும்.
Photo: MetaAI
இப்பொது அருமையான, சுவையான பலாப்பழ கருப்பட்டி தேங்காய் பர்பி ரெடி.
Photo: MetaAI
Explore