மணமும் ருசியும் கலந்த மட்டன் வெள்ளை குருமா!

தினத்தந்தி

தேவையான பொருட்கள்: தேவையான பொருட்கள்: மட்டன் – 1/2 கிலோ, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 1/2 கப், முந்திரி – 8–10, தயிர் – 1/2 கப், சோம்பு – 1 டீஸ்பூன், இலவங்கப்பட்டை – 1 துண்டு, கிராம்பு – 3, ஏலக்காய் – 2, எண்ணெய்/நெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை: முதலில் மட்டனை நன்றாக கழுவி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.

பின்னர் தேங்காய் மற்றும் முந்திரியை சேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.

அடுத்து கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, சோம்பு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்னர் வேகவைத்த மட்டனை சேர்த்து கலக்கவும். தயிர் மற்றும் அரைத்த தேங்காய்-முந்திரி விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் குருமா பதமாக வரும் வரை சமைக்கவும். இறுதியாக உப்பு சரி பார்த்து, சிறிது நெய் சேர்த்து இறக்கவும்.

குறிப்புகள்: இந்த குருமாவிற்கு மிளகாய் தூள் பயன்படுத்தப்படாது; அதனால் இது “வெள்ளை குருமா” எனப்படுகிறது. பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம் ஆகியவற்றுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

உங்களை கிச்சன் கில்லாடியாக்கும் சூப்பர் சமையல் டிப்ஸ்!