வாழைப்பழம் - பேரீச்சம்பழம்: எது உடனடி ஆற்றலை வழங்கும்?

தினத்தந்தி

வாழைப்பழங்களில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. ஒரு வாழைப்பழம் சுமார் 100 கலோரிகளை வழங்கும். அதனுடன் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் உள்ளடங்கியுள்ளன.

credit: freepik

பேரீச்சம் பழத்தை பொறுத்தவரை அதிக கலோரிகளை கொண்டது. 3-4 பேரீச்சம் பழங்கள் சுமார் 90 முதல் 120 கலோரிகளை கொண்டிருக்கும். அத்துடன் இயற்கையான சர்க்கரைகள், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்திருக்கும்.

credit: freepik

வாழைப்பழங்கள் எளிதில் ஜீரணமாகும் கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. அவற்றில் நார்ச்சத்தும் இருக்கிறது. அது சர்க்கரை உறிஞ்சப்படுவதை சற்றே தாமதப்படுத்த உதவும். இதனால் மிதமான உடல் செயல்பாடுகளின் போது நீடித்த ஆற்றலை தக்கவைக்க வாழைப்பழம் ஏற்றதாக இருக்கும்.

credit: freepik

பேரீச்சம் பழங்கள் அதிக அளவு இயற்கையான சர்க்கரையைக் கொண்டிருப்பதால் வேகமான மற்றும் தீவிரமான ஆற்றலை அளிக்கின்றன. இதனால் உடற்பயிற்சிக்குப் பிறகோ அல்லது விரதத்தின்போதோ ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக மீண்டுவர பேரீச்சம் பழங்கள் சிறந்த தேர்வாக அமைகின்றன.

credit: freepik

வாழைப்பழங்கள் சற்று பழுத்த நிலையில் இருக்கும்போது, மிதமான கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. திடீர் சர்க்கரை ஏற்ற இறக்கங்களை தவிர்க்க உதவும். பேரீச்சம்பழங்களை அதிக அளவில் உட்கொள்ளும்போது அதிக கிளைசெமிக் குறியீட்டுக்கு மாறி ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தக்கூடும்.

credit: freepik

பேரீச்சம் பழம் உடலுக்கு உடனடி ஆற்றலையும், வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான இரும்புச்சத்தையும், தசை மீட்சிக்கு தேவையான மெக்னீசியத்தையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கும் ஆன்டி ஆக்சிடென்டையும் வழங்கும்.

credit: freepik

எது சிறந்தது? உடலுக்கு நிலையான, நீடித்த ஆற்றல் தேவைப்பட்டால் வாழைப்பழங்கள் சிறந்த தேர்வாகும். உடலுக்கு உடனடியாக ஆற்றல் தேவைப்பட்டால் பேரீச்சம் பழங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

credit: freepik
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகளும் தீர்வும்!