உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகளும் தீர்வும்!

தினத்தந்தி

நம் உடலில் உள்ள உஷ்ணம் அதிகமானால் பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே, உடல் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.

உடற்சூடு அதிகரித்தால் பித்தப்பை பாதிக்கப்படும். அதோடு கல்லீரலும் பாதிக்கப்படும். இதன் காரணமாக பல உஷ்ண நோய்கள் ஏற்படுகின்றன.

உடற்சூடு அதிகரித்தால் கண் எரிச்சல், தூக்கமின்மை, வாய்ப்புண் போன்ற அறிகுறிகள் தோன்றும். அப்போது உடனே கவனித்து சரிசெய்ய வேண்டும்.

நமது உடல் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தத்துவங்களின் அடிப்படையில் இயங்குகிறது. இவை 1 : ½ : ¼ என்ற அளவில் சமநிலையில் இருக்க வேண்டும்.

இதில் பித்தம் அதிகரிக்கும்போது உடற்சூடு அதிகரிக்கும். இதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்களே ஆகும்.

உடற்சூடு மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், தூக்கமின்மை, வயிற்று எரிச்சல், சிறுநீரில் எரிச்சல், கண் எரிச்சல், மூலநோய், மலக்குடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

உடற்சூட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் உடல் சூட்டை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

புளிப்பு, உப்பு, காரம் அதிகமான உணவுகளை உட்கொண்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.

மேலும் டீ, காபி, கோலா போன்ற கஃபைன் பானங்கள், மீன், கருவாடு, கத்தரிக்காய், புளித்த தயிர், வினிகர், ஊறுகாய் போன்றவை உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். மதுபானம் மற்றும் புகைப்பழக்கமும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்.

வைட்டமின் டி அதிகரிக்க தினமும் எப்போது வெயிலில் நிற்க வேண்டும்?