தினத்தந்தி
மூணாறு: பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கும், கண்கவர் மலைப்பாதைகளுக்கும் பெயர் பெற்ற கேரளா மாநிலத்தின் ஒரு பிரபலமான மலைவாஸ்தலமாகும்.
வயநாடு: அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள், குகைகளுக்கு பெயர்பெற்றது. மூடுபனி நிறைந்த காலை பொழுது சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடும்
வாகமன்: புல்வெளிகள், பைன் காடுகள் மற்றும் மூடுபனி சூழ்ந்த மலைகளுடன் கூடிய ஒரு அமைதியான மலைப்பிரதேசம். இது, குளிர்காலத்திற்கு ஏற்ற சிறந்த சுற்றுலா தலமாகும்.
பொன்முடி: மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மறைக்கப்பட்ட அழகிய மலைவாசஸ்தலம். இது, ட்ரெக்கிங் செல்லவும் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கும் சிறந்த ஸ்பாட் ஆகும்.
தேக்கடி: தேக்கடி, இடுக்கி மாவட்டத்தில் உள்ள அழகிய ஸ்பாட் ஆகும். பெரியாறு ஏரியில் படகு சவாரி, புலிகள் காப்பகம், யானைகள் மற்றும் அரிய வகை வனவிலங்குகளைக் கண்டு ரசிக்கலாம்.
காந்தளூர்: ஆப்பிள், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆரஞ்சு தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. அடர்ந்த காடுகள், அருவிகள் மற்றும் அமைதியான சூழல், இயற்கையை ரசிக்க சிறந்த இடமாக மாற்றுகிறது.
ஊட்டி: தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மலைவாஸ்தலமாகும். கேரளாவில் இருந்து சில மணிநேரப் பயணத்தில், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குளிர்ச்சியான காலநிலையுடன் இந்த அழகான சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது.