வாழ்க்கையில் நினைத்தது கிடைக்க செல்ல வேண்டிய கோவில்கள்!

தினத்தந்தி

திருப்பதி தேவஸ்தானம்; திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வது வாழ்வில் உள்ள தடைகளை நீக்கி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை அளிக்கும் என்பது நம்பிக்கை.

Photo: wikipedia

கேரளா குருவாயூர்: பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புத திருத்தலம் இது. திருமணம், குழந்தை வரம், ஆரோக்கியத்திற்கு ஏராளமானோர் செல்வார்கள்.

Photo: wikipedia

ஷீரடி சாய்பாபா: மகாராஷ்டிரா ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்வது மனதில் இருக்கும் குழப்பங்களை நீக்கக்கூடும். பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும் தைரியம் அளிக்கும் என நம்பிக்கை.

Photo: wikipedia

காஷ்மீர் வைஷ்ணவி தேவி; இவ்வாலயத்தில் உள்ள வைஷ்ணவி தேவியிடம் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Photo: wikipedia

காசி விஸ்வநாதர் கோவில்: வாழ்நாளில் ஒருமுறையாவது காசி சென்று விஸ்வநாதரைத் தரிசிப்பது, சகல பாவங்களையும் போக்கி முக்தியை அருளும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை

Photo: wikipedia

ராமேஷ்வரம் கோவில்; ராமேஸ்வரம், இந்தியாவின் மிக முக்கியமான புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள 22 புனிதக் கிணறுகளில் நீராடுவது, பாவங்களை நீக்கி மனத்தூய்மை அளிப்பதாக நம்பிக்கை.

Photo: wikipedia

மதுரை மீனாட்சி கோவில்; இங்கு வழிபாடு செய்வது திருமண தடை நீக்கி, குடும்ப உறவை வலுப்படுத்தி, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

Photo: wikipedia

பூரி ஜெகநாதர் கோவில்; ஜெகநாதர், பலபத்ரா, மற்றும் சுபத்ரா தேவி ஆகிய மூவரும் தனித்தனி ரதங்களில் ஏறி, பூரி நகரை வலம் வந்து பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளித் தருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Photo: wikipedia
பெண்களுக்கு பெரிதும் உதவும் கொத்தவரங்காய்!