தினத்தந்தி
கோவா - கலகலப்பான பார்ட்டிகள், கேளிக்கைகள், விருந்துகள், வகை வகையான அறுசுவை உணவுகள், ஷாப்பிங் என கோவா சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சொர்க்கமாக விளங்குகிறது.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் (தமிழ்நாடு): ஏரிகள், பூங்காக்கள், இதமான காலநிலை கொண்ட பிரபலமான மலைவாசஸ்தலங்கள்.
கூர்க் - கர்நாடகாவின் "ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் குடகு (கூர்க்), காபி தோட்டங்கள், மூடுபனி மலைகள், அருவிகள் மற்றும் இதமான காலநிலை கொண்ட சிறந்த மலை சுற்றுலாத் தலமாகும்.
ஆலப்புழா - அழகிய உப்பங்கழியில் ஓய்வெடுக்க விரும்பினால் ஆலப்புழா உங்களுக்கு ஒரு சரியான தேர்வாக இருக்கும். தண்ணீரால் சூழப்பட்டுள்ள ஆலப்புழா கற்பனைக்கும் எட்டாத அழகில் நம்மை பிரம்மிப்பூட்டுகிறது.
சிக்மகளூர் - பசுமையான மலைகள், காபி தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் சாகச அனுபவங்களுக்குப் பெயர் பெற்ற கர்நாடகாவின் பிரபலமான மலைவாசஸ்தலமாகும்.
தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மகாபலிபுரம் போன்றவை தமிழ்நாட்டின் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலைகளைக் கண்டு ரசிக்க சிறந்த இடங்கள்.
மூணாறு மற்றும் வயநாடு - மூணாறு மற்றும் வயநாடு இரண்டும் கேரளாவின் பிரபலமான மலைவாசஸ்தலங்கள்; மூணாறு தேயிலைத் தோட்டங்களுக்கும், அமைதியான சூழலுக்கும் பெயர் பெற்றது, வயநாடு நீர்வீழ்ச்சிகள், மலையேற்றம் போன்ற சாகசங்களுக்கும் மிகவும் பிரபலமானது.