தினத்தந்தி
மெக்லியோட் கஞ்ச் - இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெக்லியோட் கஞ்சியின் இயற்கை பாதைகளும், அமைதியான பள்ளத்தாக்குகள், ஆன்மிகம் மற்றும் சாகசத்தை விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடமாகும்.
ஹம்பி - கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் விஜயநகர பேரரசின் பாரம்பரிய சின்னங்களையும், மலை கோவில்களையும் பார்த்து ரசிக்கலாம். இந்தியாவில் மிக பிரபலமான நகரங்களில் ஒன்றான ஹம்பி இராமாயணத்தில் கிஷ்கிந்தை என குறிப்பிடப்படும் நகரமாகும்.
ரிஷிகேஷ் - குறைந்த விலையில் சாகச விளையாட்டுகளையும், யோகா பயிற்சிகள், அமைதி, ஆன்மீகம், கலாச்சாரம் தேடுபவர்களுக்கு ஏற்ற நகரம். பாவங்கள் போக்கும் ரிஷிகேஷ் போக்குவரத்து நெரிசல், மதுபானங்கள் இல்லாத புனித இடமாகும்.
புதுச்சேரி - இங்குள்ள இடங்களை சைக்கிளை வாடகைக்கு எடுத்தாலே ஜாலியாக சுற்றி பார்த்து விட்டு ஏற்ற உணவுகளை சாப்பிட்டு மகிழலாம்.
வாரணாசி - கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான மற்றும் புனிதமான நகரமாகும்; இங்குள்ள தனித்துவமான ஆன்மிக சூழல் மற்றும் கலாச்சாரம் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.
புஷ்கர் - துடிப்பான கலாச்சாரம், புனித ஏரி மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற தெரு உணவுகள், பிரம்மா கோவில், ஒட்டக திருவிழா ஆகியவை இங்கு மிகவும் பிரபலமானவை
கசோல் - இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கசோலில் பார்வதி பள்ளத்தாக்கு பயணம் புதிய அனுபவத்தை கொடுக்கும். கசோல் குக்கிராமம் என்றாலும் இயற்கை அழகு கொட்டி கிடக்கும் அற்புதமான சுற்றுலா தலம்.
டார்ஜிலிங் - தேயிலை தோட்டங்கள், பொம்மை ரயில் மற்றும் பிரமிக்க வைக்கும் இமயமலை காட்சிகளை காணலாம். இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்படும் டார்ஜிலிங் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் ஆகும்.
கோகர்ணா - அமைதியான கடற்கரைகள், கோவில்கள் மற்றும் புதிய கடல் உணவுகளை அதிக செலவு இல்லாமல் உண்டு மகிழலாம். விடுமுறையை குறைந்த செலவில் நிறைவாக கழிக்க ஏற்ற இடம்.