செர்ரி பழத்தால் கிடைக்கும் அழகான சருமம்..!

தினத்தந்தி

சருமத்தை பராமரிக்க இயற்கை முறைகள் மிகவும் பாதுகாப்பானவை. அந்த வகையில் செர்ரி பழம் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது.

முகத்தை நன்றாக கழுவிய பிறகு அரைத்த செர்ரி பழத்தை முகத்தில் தடவினால் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் காய்ந்த செர்ரி பழங்களை பயன்படுத்தலாம்.

செர்ரி பழத்துடன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் அரிப்பு பிரச்சினை குறைய உதவும்.

செர்ரி பழம் மற்றும் தேன் கலவையை தொடர்ந்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கருமை மற்றும் சுருக்கங்களை குறைக்கலாம்.

அரைத்த செர்ரி பழத்துடன் ஆலிவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால் வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கும்.

முட்டையின் வெள்ளைக்கரு, தேன் மற்றும் செர்ரி பழம் சேர்த்து முகத்தில் தடவி கழுவினால் சருமம் பளிச்சென்று காணப்படும்.

இயற்கை முறையில் சருமத்தை பராமரிக்க விரும்புபவர்களுக்கு செர்ரி பழம் சிறந்த தேர்வாக இருக்கும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலை மறக்கச் செய்வது எப்படி?