குழந்தைகளுக்கு தாய்ப்பாலை மறக்கச் செய்வது எப்படி?

தினத்தந்தி

குழந்தைகள் தாய்ப்பாலுக்கு அதிகமாக பழகியிருப்பதால் அதை திடீரென நிறுத்துவது தாய்க்கும் குழந்தைக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவே தாய்ப்பாலை மெதுவாகவும், படிப்படியாகவும் நிறுத்துவது சிறந்த முறையாகும்.

தாய்ப்பாலை திடீரென நிறுத்தினால் தாயின் மார்பகங்களில் பால் கட்டுதல், வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதேபோல் குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் மற்றும் ஏக்கம் உருவாக வாய்ப்பு உள்ளது.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை குறைத்து, பால் சுரப்பை கட்டுப்படுத்த உதவும் உணவுகளை தேர்வு செய்வது நல்லது. இதன் மூலம் தாய்ப்பால் சுரப்பு படிப்படியாக குறைய உதவும்.

முட்டைகோஸ் இலைகளை சில மணி நேரம் மார்பக பகுதியில் வைத்திருப்பது தாய்ப்பால் சுரப்பை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

குழந்தைகள் தாயின் மார்பகத்தை அடிக்கடி பார்க்காத வகையில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் முன் உடை மாற்றுவது அல்லது பால் கொடுக்கும் பழக்கத்தை மெதுவாக குறைப்பது உதவியாக இருக்கும்.

குழந்தைக்கு புட்டியில் பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். குழந்தைக்கு பிடித்த நிறம் மற்றும் வடிவம் கொண்ட பாட்டில்களை பயன்படுத்தினால் அவர்கள் எளிதில் பழகக்கூடும்.

குழந்தையின் கவனத்தை மாற்ற கதை சொல்லுதல், பாடல்கள் கேட்க வைப்பது, விளையாடச் செய்வது அல்லது வெளியே அழைத்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுத்தலாம்.

குழந்தைகள் நடக்கத் தொடங்கும் காலத்தில் தாய்ப்பாலை மெதுவாக நிறுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது. குழந்தையின் மனநிலையையும் உடல்நிலையையும் கவனித்து பொறுமையாக இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்.

மளிகை செலவை குறைக்க உதவும் அசத்தலான டிப்ஸ்..!