தினத்தந்தி
புடலங்காய் சத்துக்கள் நிறைந்த காய்கறியாகும். இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் அடங்கியுள்ளன.
நீர்ச்சத்து அதிகம் கொண்ட புடலங்காய், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. கோடை காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையை குறைக்க உதவுகிறது.
குறைந்த கலோரி கொண்ட காய்கறி என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.
புடலங்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன், ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது.
சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் புடலங்காய், ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறியாக கருதப்படும் புடலங்காய், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதுடன் தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது.