சுரைக்காய் அனைவருக்கும் நல்லதா? யார் தவிர்க்க வேண்டும்?

தினத்தந்தி

சுரைக்காய் சத்துகள் நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் அதிகமாக உள்ளன.

சுரைக்காயை சாம்பார், சட்னி, பருப்பு, ஜூஸ் உள்ளிட்ட பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

சுரைக்காய் சாறு செரிமானத்தை மேம்படுத்த உதவுவதுடன், மலச்சிக்கல் பிரச்சினையையும் குறைக்க உதவுகிறது.

ஆனால் சுரைக்காய் அனைவருக்கும் ஏற்ற உணவாக இருக்காது. குறிப்பாக குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை அளவோடு மட்டுமே சாப்பிட வேண்டும்.

ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். அரிப்பு, தோல் சொறி அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே தவிர்க்க வேண்டும்.

வாயுத் தொல்லை, அஜீரணம் அல்லது வயிற்றுப் புண் உள்ளவர்களும் சுரைக்காயை அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் சுரைக்காய் அல்லது சுரைக்காய் சாறு எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

எந்த உணவாக இருந்தாலும் உடல்நிலைக்கு ஏற்றவாறு அளவோடு சாப்பிடுவது மட்டுமே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வழியாகும்.

கருத்தரித்தல் வாய்ப்பை அதிகரிக்க அத்திப்பழம் உதவுமா?