மோர் மற்றும் லஸ்ஸி..கோடைகாலத்தில் எது சிறந்தது?

தினத்தந்தி

மோர் மற்றும் லஸ்ஸியில் உள்ள குளிர்ச்சியான தன்மைகள் நம் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த உதவுவதோடு, அவற்றில் உள்ள பொட்டாசியம், சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் காரணமாக புத்துணர்ச்சியும் தருகின்றன.

மோர் மற்றும் லஸ்ஸி நம் உடலில் நாள் முழுவதும் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கின்றன. குறிப்பாக கோடைக்காலத்தில் இந்த இரண்டு பானங்களும் நம் உடலுக்கு பெரும் உதவி செய்கின்றன.

மோர் மற்றும் லஸ்ஸியில் உள்ள ப்ரோபயோடிக் பண்புகள் வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை குறைத்து, செரிமானத்திற்கு உதவுகின்றன.

தினமும் மோர் மற்றும் லஸ்ஸி குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும்.

இயற்கையாகவே லஸ்ஸி மற்றும் மோரில் உடலுக்கு சக்தி தரும் தன்மை உள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்த இரண்டு பானங்களிலும் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகளாகும்.

மோர் மற்றும் லஸ்ஸியில் உள்ள அதிகளவு கால்சியம் நம் எலும்புகளையும் பற்களையும் வலிமையடையச் செய்கின்றன.

லஸ்ஸி மற்றும் மோர் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். அதோடு ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும் இந்த பானங்கள் உதவுகின்றன.

மோர் மற்றும் லஸ்ஸியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை அளவாகவே குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் உருவாகலாம் அல்லது உடல் எடை அதிகரிக்கலாம்.

கோடை வந்தாச்சு...வெயிலில் இருந்து உடலை காக்கும் முக்கிய வழிமுறைகள்!