கோடை வந்தாச்சு...வெயிலில் இருந்து உடலை காக்கும் முக்கிய வழிமுறைகள்!

தினத்தந்தி

கோடையில் சூரிய ஒளியின் தாக்கத்தால் நம் சருமத்தில் புறஊதாக் கதிர்களால் பாதிப்பு ஏற்படலாம். அதிலிருந்து தப்பிக்க நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

credit: freepik

உடலுக்குக் குளிர்ச்சி தரும் தானியங்களான சோளம், பார்லி போன்றவற்றை கோடை காலத்தில் சேர்க்கலாம். மேலும், சோம்பு, சீரகம், பழங்களில் திராட்சை, பேரீச்சை மற்றும் நீர்ச்சத்துள்ள பழங்கள் நல்லது.

credit: freepik

கோடை காலத்தில் இரவில் பனங்கற்கண்டு கலந்து பாலை அருந்தி வர, உடல் சூடு தணியும். பகலில் கொத்தமல்லித் தழையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும்.

credit: freepik

கோடை காலத்தில் வரும் முக்கியமான பிரச்சனை, 'புட் பாய்சன்'. அதைத் தவிர்க்க, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து மோரில் கலந்து குடித்து வர, புட் பாய்சன் அபாயம் நீங்கும். வயிற்றுப்போக்கு போன்றவற்றையும் சரிசெய்யும்.

credit: freepik

உடலில் சூட்டை அதிகரிக்கும் வேர்க்காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட் மற்றும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, காளான் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

credit: freepik

கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன், நீரிழப்பைத் தடுக்கவும் தர்பூசணி உதவுகிறது. தர்பூசணி உங்களை நீரேற்றமாகவும், குளிர்ச்சியாகவும் வைப்பதுடன், சூரிய வெப்பத்தால் சருமம் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

credit: freepik

முலாம் பழம், கோடைகால வெப்பத்தால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களைத் தவிர்த்து உடலை நீரேற்றமாக வைக்க உதவும்.

credit: freepik

கோடை காலத்தில் கண்களின் நலன் காக்க தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வரலாம். அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும்.

credit: freepik

அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும். வெளியே செல்லும்போது சன்ஸ் கிரீன் போட்டுக்கொள்வதும் நல்லது.

credit: freepik
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வாழைக்காய் நல்லதா?