தினத்தந்தி
பச்சை திராட்சையை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் சத்தான பழமாகும். இதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பச்சை திராட்சையில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இது குழந்தைகளின் உடலை நீரிழப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக கோடைக்காலத்தில் அதிக வியர்வையால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க உதவும்.
பச்சை திராட்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்ததால், பச்சை திராட்சை செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
பச்சை திராட்சையில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், குழந்தைகளில் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது.
குறிப்பு:1 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு முழு திராட்சை கொடுக்க வேண்டாம். இது மூச்சுத்திணறல் அபாயத்தை ஏற்படுத்தும். கொடுக்கும்போது சிறு துண்டுகளாக வெட்டி கொடுத்தால் பாதுகாப்பாக இருக்கும்.