சர்க்கரை நோயாளிகள் பாப்கார்ன் சாப்பிடலாமா?

தினத்தந்தி

பாப்கார்ன் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான நொறுக்குத்தீனியாக கருதப்படுகிறது. குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டதால், சர்க்கரை நோயாளிகளும் அளவோடு சாப்பிடலாம்.

ஒரு கப் பாப்கார்னில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்பு மட்டுமே உள்ளது. அதேசமயம் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தும் இருப்பதால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.

பாப்கார்னில் உள்ள மிதமான கிளைசிமிக் இன்டெக்ஸ் ரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்காமல் இருக்க உதவக்கூடும்.

இதில் வைட்டமின் ஏ, பி வகை வைட்டமின்கள், ஈ மற்றும் இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை உடலுக்கு தேவையான சத்துகளை வழங்குகின்றன.

பாப்கார்னில் உள்ள பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஜியோசாந்தின் போன்ற சத்துக்கள் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியவை.

மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் சத்துக்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ராடிக்கல்களை குறைக்க உதவுகின்றன.

ஆனால் சர்க்கரை நோயாளிகள் பாப்கார்னை வெண்ணெய், அதிக உப்பு அல்லது கேராமல் சேர்க்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது.

எண்ணெய், மசாலா மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட பாப்கார்ன் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். எனவே சாதாரணமாக தயாரிக்கப்பட்ட பாப்கார்னை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

அளவோடு எடுத்துக்கொண்டால் பாப்கார்ன் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமான இடைவேளை உணவாக அமையும்.

தினமும் தேங்காய்ப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!