கட்டிப்பிடிப்பதால் உடலில் இவ்வளவு அதிசயங்கள் ஏற்படுமா?

தினத்தந்தி

கட்டிப்பிடிப்பது ‘காதல் ஹார்மோன்’ எனப்படும் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கச் செய்யும். அந்த காதல் ஹார்மோன் இதய ஆரோக்கியத்தில் நேர் மறையான விளைவை ஏற்படுத்தக்கூடியது.

credit: freepik

20 வினாடிகள் கட்டிப்பிடிப்பது, 10 நிமிடங்கள் கைகளை இறுக பற்றிக்கொள்வது ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மன அழுத்தம் போன்றவற்றை குறைக்கக்கூடும்.

credit: freepik

குழந்தைகள் சிறப்பாக செயல்படும்போது சாக்லேட் கொடுத்து பாராட்டுவார்கள். பரிசு கொடுத்தும் ஊக்கப்படுத்துவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் இன்னும் சிறப்பாக செயல்பட தொடங்குவார்கள்

credit: freepik

இதேபோல் கட்டிப்பிடிப்பது, முதுகில் தட்டுவது, கைகுலுக்குவது போன்ற செயல்பாடுகள் நரம்பு மண்டலத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தி நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நம்பப்படுகிறது.

credit: freepik

கட்டிப்பிடித்து அரவணைப்பது பயத்தை குறைக்கவும் உதவும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆறுதல்தான் அரு மருந்தாகும்.

credit: freepik

கோபம், பயம், வெறுப்பு, நன்றி, சோகம், மகிழ்ச்சி, அன்பு மற்றும் அனுதாபம் போன்ற பல்வேறு உணர்வுகளையும் தொடுதல் மூலம் வெளிப்படுத்த முடியும்.

credit: freepik

மிகவும் பிடித்தமான பொருளை தொடுவது பயத்தை குறைக்க உதவும் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கட்டிப்பிடிப்பது ஆறுதல் அளிப்பதோடு மற்றவர்களுடன் நெருக்கத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கும் வித்திடும்.

credit: freepik
தலையில் ஏன் எண்ணெய் தடவ வேண்டும் தெரியுமா?