தினத்தந்தி
தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யும்போது வேர்கள் எண்ணெய்யை நன்கு உறிஞ்சிக்கொள்ளும். மேலும் மசாஜ் செய்யும் வழக்கத்தை பின் தொடரும்போது ரத்த ஓட்டம் சீராகி முடியின் வேர் கால்கள் வலிமை அடைந்து முடி உதிர்வது குறைந்துவிடும்.
உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருக்கிறது, வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது, மேலும் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது.
பேன் தொல்லை, முடி வறட்சி அடைதல், முடி உடைதல் என தலைமுடியை பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன.
தலைக்கு முறையாக எண்ணெய் தடவி பராமரிப்பதுதான் இதற்கு ஒரே தீர்வாக அமையும். தலைக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்வது வேர்களுக்கு ஊட்டமளித்து முடியை உறுதியாக்கும்.
மேலும் பொடுகு தொல்லையும் நீங்கிவிடும். ஏனெனில் பொடுகு தொல்லைக்கு முக்கிய காரணம் தலை முடி வறட்சியாக இருப்பதுதான். அதற்கு தலையில் எண்ணெய் வைக்காததுதான் முக்கிய காரணமாகும்.
தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு கால் மணி நேரம் கழித்து குளிக்கலாம். குளித்து முடித்ததும் தலை முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மின்னுவதை காணலாம்.
இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் ஹேர் கண்டிஷனர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவை சிக்கு விழாத கூந்தலை பெறவும் உதவுகின்றன. ஆனால் தலைமுடிக்கு சிறந்த இயற்கை மாய்ஸ்சுரைசர் எண்ணெய்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.