காலையில் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?

தினத்தந்தி

வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், சி மற்றும் கே ஆகியவை அதிகம் உள்ளது. உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வாருங்கள்.

வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ இருப்பதால், இதனை உண்டுவர கண்களில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.

இரவு முழுவதும் தண்ணீர் குடிக்காமல் இருக்கும் உடலுக்கு, காலையில் வெள்ளரிக்காய் உடனடியாக நீரேற்றத்தை அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

இதில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கிறது.

குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டதால், காலை உணவுக்கு முன் சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வெள்ளரிக்காயில் உள்ள சிலிக்கா மற்றும் கந்தகம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, மேலும் நீர்ச்சத்து சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

குறிப்பு :சைனசிடிஸ் (Sinusitis) அல்லது பலவீனமான செரிமானம் உள்ளவர்கள் காலையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இது குளிர்ச்சி தன்மையால் சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.

தினமும் பாதாம் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!