உருளைக்கிழங்கு ஜூஸ் உடலில் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்துமா?
Dinesh
கண்களில் கருவளையத்தால் பாதிக்கப்படுபவர்கள் உருளைக்கிழங்கு சாறு பருகி வரலாம். கண்களுக்கு அடிப்பகுதியிலும் உருளைக்கிழங்கு சாறை தடவி வரலாம் அல்லது மெல்லிய உருளைக்கிழங்கு துண்டுகளை கண்களின் மேல் அரை மணி நேரம் வைத்திருக்கலாம்.
credit: freepik
முகம் மற்றும் கண்கள் வீங்கி இருந்தால் உருளைக்கிழங்கு சாறை உபயோகிக்கலாம். அதில் இருக்கும் நீர்ச்சத்து வீக்கத்தை குறைக்கும். சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் கொடுக்கும்.
credit: freepik
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துவதற்கு உருளைக்கிழங்கு சாறு உதவும்.
credit: freepik
உருளைக்கிழங்கில் வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. அது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும்.
credit: freepik
ஒரு டம்ளர் உருளைக்கிழங்கு சாறு பருகுவதன் மூலம் ஒருநாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்தை ஏறக்குறைய பெற்றுவிடலாம். சாப்பிடும் உணவில் வைட்டமின் சி இருப்பது உடலில் இரும்புச் சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
credit: freepik
துத்தநாகம், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை உருளைக்கிழங்கில் உள்ள மற்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள். இந்த வைட்டமின்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
credit: freepik
தோல் அழற்சி உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு உதவியாக இருக்கும். பொடுகு பிரச்சினை கொண்டவர்கள் உருளைக்கிழங்கு சாறை உச்சந்தலையில் தடவி வருவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.