6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுமா?

தினத்தந்தி

தினமும் இரவு 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு.

credit: freepik

பசியைத் தூண்டும் ஹார்மோன் அதிகரிக்கும். அதிகப்படியான பசி காரணமாக கண்ட நேரத்தில் தேவையற்ற உணவுகளை சாப்பிட நேரலாம்.

credit: freepik

7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட ரத்தக்குழாயில் அதிக கொழுப்பு படிவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

credit: freepik

மூளையில் நச்சுக்கள் குவியும். பிறகு எதிர்காலத்தில் அறிவாற்றல் குறைபாடு அல்லது மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

credit: freepik

மனச்சோர்வு, கவலை, எதிர்மறையான உணர்வுகள், பயம், அதிக கோபம், மனஅழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும்.

credit: freepik

நினைவாற்றல் குறைபாடு, முடிவெடுக்கும் திறன் குறைவு, கவனச் சிதறல் போன்றவையும் குறைந்த தூக்கத்தால் ஏற்படுகின்றன.

credit: freepik

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும். ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றின் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

credit: freepik
வயது 14.. சாதனைகள் பல.. யு19 உலகக்கோப்பையில் அதிரடி காட்டிய சூர்யவன்ஷி!