அன்றாட உணவில் பச்சைப்பயிறு சாப்பிடலாமா?

தினத்தந்தி

நமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு (பச்சைப்பயிறு) முக்கிய இடத்தை வகிக்கிறது.

பச்சைப்பயிறில் அதிக அளவில் இரும்புச் சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது. மேலும் இதில் கொழுப்பு குறைவாக உள்ளது. அதோடு பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்பு சத்துகளும் அடங்கியுள்ளதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.

உடல் எடையை குறைக்க உதவும் : பச்சைப்பயிறு நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு நேர உணவாக எடுத்துக்கொண்டால், உடல் எடை படிப்படியாக குறைய உதவும்.

ரத்தசோகையை தடுக்கும் : பச்சைப்பயிறை முளைக்கட்டி சாப்பிடும்போது, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் : பச்சைப்பயிறு, தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை அரைத்து பால் எடுத்து அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உதவுகிறது.

வயிற்றுப்புண் குணமாகும் : பச்சைப்பயிறு உடலில் இருக்கும் அதிகமான காரத்தன்மையை கட்டுப்படுத்துகிறது. அதனால் அல்சர் அல்லது வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு பாசிப்பயிறு குழம்பு கொடுப்பது நல்லது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது : பச்சைப்பயிறில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை பாதுகாக்க உதவுகிறது.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் : தினமும் முளைகட்டிய பச்சைப்பயிறு சாப்பிடுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

அன்றாட உணவில் கீரைகளின் பங்கு என்ன?