தினத்தந்தி
இரவு நேரத்தில் சிக்கன் சாப்பிடுவது பொதுவாக பாதுகாப்பானது. ஆனால், அளவோடு சாப்பிடுவதும், சமைக்கும் முறையும் முக்கியம்.
எண்ணெயில் பொரித்த சிக்கனுக்கு பதிலாக Grilled, Steamed அல்லது குறைந்த எண்ணெயில் சமைத்த சிக்கன் சிறந்த தேர்வாகும்.
அதிக காரம், மசாலா மற்றும் எண்ணெய் சேர்த்த உணவுகளை இரவில் தவிர்ப்பது செரிமானத்திற்கு நல்லது.
இரவு 8:30 மணிக்குள் சாப்பிட்டு, தூங்குவதற்கு 2–3 மணி நேர இடைவெளி விடுவது நல்லது.
சிக்கனுடன் கீரை, வெண்டைக்காய், காய்கறிகள் அல்லது முழு கோதுமை ரொட்டி சேர்த்து சாப்பிட்டால் சமச்சீர் உணவாக இருக்கும்.
அஜீரணம், அமிலத்தன்மை (GERD) அல்லது பிற செரிமானப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இரவில் சிக்கனைத் தவிர்ப்பது நல்லது.
யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள் மற்றும் குறைந்த கொழுப்பு உணவு முறையைப் பின்பற்றுபவர்கள், தோல் நீக்கிய சிக்கனை அளவோடு சாப்பிட வேண்டும்.
இரவு நேரத்தில் சிக்கனுக்கு மாற்றாக மீன், தயிர், பருப்பு வகைகள் போன்ற எளிதில் செரிக்கும் புரோட்டீன் உணவுகளையும் தேர்வு செய்யலாம்.