இரவில் நூடுல்ஸ் சாப்பிடலாமா? தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!

தினத்தந்தி

நூடுல்ஸ் பலருக்கும் விருப்பமான உணவாக இருந்தாலும், அதை இரவு நேரத்தில் அடிக்கடி சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நூடுல்ஸில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரவில் சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இரவு நேரத்தில் உடலின் செரிமான செயல்பாடு மந்தமாக இருக்கும். அப்போது நூடுல்ஸ் போன்ற கனமான உணவுகளை சாப்பிடுவது அஜீரணம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

பொரித்த அல்லது அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட நூடுல்ஸ் உடலில் தேவையற்ற கொழுப்பை சேர்க்கும். இது நீண்ட காலத்தில் உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

நூடுல்ஸ் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தினாலும், அதில் சத்துக்கள் குறைவாக இருப்பதால் உடலுக்கு தேவையான முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.

இரவு நேரத்தில் அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவது தூக்கத்தையும் பாதிக்கக்கூடும். சிலருக்கு வயிற்று எரிச்சல் மற்றும் செரிமான சிக்கல்களும் ஏற்படலாம்.

அதற்கு பதிலாக இரவு நேரத்தில் காய்கறி உணவுகள், பழங்கள் அல்லது லேசான வீட்டுச் சாப்பாடுகளை தேர்வு செய்வது நல்லது.

அளவோடு மற்றும் அரிதாக நூடுல்ஸ் சாப்பிடுவது பிரச்சினையில்லை. ஆனால் தினசரி இரவு உணவாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

காரசாரமான இறால் சுக்கா மசாலா.. வீட்டிலேயே எளிதாக செய்யலாம்..!