தினத்தந்தி
கண் ஆரோக்கியம் காக்கும் - சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா-கரோட்டின் அதிக அளவில் உள்ளது. அதன் ஆரஞ்சு நிறமே அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது. கேரட்டை விட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
இரவு நேர பார்வையிழப்பு தன்மை ஏற்படுவதை தடுப்பதிலும், ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறப்புற்று விளங்குகிறது.
ரத்த அழுத்தத்தை காக்கும் - சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியம், உடலில் அதிகமாக சேரும் சோடியத்தை சமநிலைப்படுத்தக்கூடியது. அதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவிடும்.
கேரட்டிலும் பொட்டாசியம் உள்ளது. ஆனால் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னிலை வகிக்கிறது.
கொழுப்பை கட்டுப்படுத்தும் - கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். செரிமான மண்டலத்தில் சேமித்துவைத்து, ஆரோக்கியமான கொழுப்பை தொடர்ந்து பயன்படுத்த வழிவகை செய்யும்.
அழற்சியை குறைக்கும் - இதய நோய்கள் ஏற்படுவதற்கு அழற்சி முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகளும் அழற்சியால் ஏற்படும் சேதங்களை தடுக்க துணைபுரிகின்றன.
எது சிறந்தது? கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டுமே கண்,இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. எனினும் கேரட்டில் கண் ஆரோக்கியத்திற்கு நேரடியாக பயனளிக்கும் ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது.
இதயத்தை பாதுகாக்கும் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிகம் உள்ளன. இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னணியில் இருக்கிறது.