நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ எந்த நேரத்தில் என்ன செய்யலாம் தெரியுமா?

தினத்தந்தி

காலை 5 முதல் 7 மணி - அதிகாலை எழுந்து, முதல் வேலையாக ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிப்பது, உடலில் சேர்ந்த கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

credit: freepik

காலை 7 முதல் 9 மணி - இது சூரிய ஒளி வெளிப்பாட்டிற்கு ஏற்ற நேரமாகும். இந்த நேரத்தில் ஸ்ட்ரெச்சிங் செய்வது அல்லது சுத்தமான காற்றுடன் கூடிய இதமான சூழலில் உடற்பயிற்சி செய்யலாம். வைட்டமின் டி கிடைப்பதோடு மன ஆரோக்கியம் மேம்படும்.

credit: freepik

காலை 8 முதல் 10 மணி - புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காலை உணவை சாப்பிடுவது, உடல் சுறுசுறுப்பாக இருக்கவும், நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படவும் உதவும், எனவே காலை உணவைத் தவிர்ப்பது நல்லதல்ல.

credit: freepik

காலை 10 முதல் 12 மணி - மூளை அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால், வேலை அல்லது படிப்பில் கவனம் செலுத்த ஒதுக்கினால் உற்பத்தித்திறன் மேம்படும்.

credit: freepik

மதியம் 12 முதல் 2 மணி - ஆரோக்கியமான, அளவான மதிய உணவு சாப்பிட சரியான நேரம்; ஏனெனில் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் மந்தமாகி, தூக்கம் வரும், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்,

credit: freepik

மதியம் 2 முதல் 4 மணி - சிறிது தூரம் நடைப்பயிற்சி அல்லது ஸ்ட்ரெச்சிங் செய்ய பிரேக் எடுக்கலாம். இது ஜீரணமாக உதவுவதோடு உடல் சோர்வை குறைக்கும்

credit: freepik

மாலை 5 முதல் 7 மணி - உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய சிறந்த நேரம்; இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, நாள் முழுவதும் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்க உதவும்.

credit: freepik

இரவு 7 முதல் 8 மணி - எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்பது, செரிமானத்திற்கு உதவுகிறது, வயிறு அசௌகரியத்தைத் தடுக்கிறது, மேலும் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

credit: freepik
மூட்டு வலிக்கு முடிவு கட்ட இந்த உணவுகளை சாப்பிடுங்க!