இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்த பிரபலங்கள்!

தினத்தந்தி

பிரதமர் மோடி : ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! இந்த குறிப்பிடத்தக்க வெற்றி விதிவிலக்கான திறமைகள், உறுதிப்பாடு மற்றும் குழுப்பணியை பிரதிபலிக்கிறது.

விராட் கோலி : அகமதாபாத்தில் நடந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி உலக சாம்பியன்களாக மாறியது. கடினமான சூழ்நிலைகளிலும் போராடி இந்த சாதனையை நிகழ்த்திய அனைத்து வீரர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துகள்.

சச்சின் டெண்டுல்கர்: இந்தியா டி20 உலகக் கோப்பையை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்று புதிய சாதனை படைத்துள்ளது; அணியின் அற்புதமான செயல்திறன் மற்றும் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தால் கோப்பையை வெல்ல முழுமையாக தகுதியானவர்கள்.

மு. க. ஸ்டாலின் : போட்டி முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை ஒரு மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்ற அனைத்து வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். டி20 உலகக் கோப்பையை 3வது முறையாக வென்ற பெருமைமிக்க தருணத்தையும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

தோனி : அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பயிற்சியாளர் கம்பீர் சிரிப்பதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. பும்ரா ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர்.

கமல்ஹாசன் :ஆண்கள் அணி தொடர்ந்து ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன்களாக திகழ்கிறது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் இதுபோன்ற உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு இருந்தால் இந்தியா என்ன சாதிக்க முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்திய இளைஞர்களின் ஆற்றல் வரம்பற்றது.

கவுதம் கம்பீர் :நாம் கோப்பைகளை கொண்டாட வேண்டும், தனி நபர்களின் சாதனையை அல்ல. சஞ்சுவின் கடைசி 3 மேட்ச்களில் அவர் சதத்தை நோக்கி ஆடாமல் இருந்தது ஒரு உதாரணம்.

கேரளா : பெண்கள், மாணவிகள், மூத்த குடிமக்கள்… பல்வேறு வாக்குறுதிகள் - ராகுல் காந்தி அறிவிப்பு!