சமையல் கலைஞரின் சாதனைப் பயணம்!

தினத்தந்தி

சமையல் கலையில் தனித்துவமான திறமையால் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் செப் தாமு (கே. தாமோதரன்). சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றது முதல் உலக சாதனைகள் படைத்தது வரை, தனது கடின உழைப்பால் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இவரது சாதனைப் பயணத்தின் முக்கிய மைல்கற்களைப் பார்ப்போம்.

2004: கேட்டரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்தார்.

2010: 24 மணி நேரம் 30 நிமிடங்களில் 617 உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

2012: 14.7 மீட்டர் நீளமுள்ள தோசையைத் தயாரித்து சாதனை நிகழ்த்தினார்.

2014: சிங்கப்பூரில் மிகப்பெரிய கறி தயாரிப்பில் உலக சாதனை படைத்தார்.

2019: 13 நாட்களில் 12,000 தமிழக உணவு வகைகளைச் சுவைத்து பெருமை சேர்த்தார்.

2021: சர்வதேச வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.

2024: தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரானார்.

2025: சமையல் கலைக்கான பங்களிப்பைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

அழிவின் அச்சுறுத்தலில் பனிச்சிறுத்தைகள்!