இளமையை காக்கும் செர்ரி – தினமும் சாப்பிட வேண்டிய காரணங்கள்!

தினத்தந்தி

செர்ரி பழம் அனைவருக்கும் பிடித்தமானதாகும். புளிப்பாகவும் இனிப்பாகவும் இருக்கும். ஆழமான சிவப்பு நிறத்தை உடையதாகும்.

செர்ரியில் வைட்டமின் சி, ஏ மற்றும் கே போன்றவை காணப்படுகின்றன. பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பீட்டா கரோட்டீன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளையும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

இதிலுள்ள வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

செர்ரியில் உள்ள பொட்டாசியம் தசைகளின் சுருக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டிற்கும், ரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.

செர்ரியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் காணப்படுகின்றன. இவை உயிரணுக்களுக்கு ஏற்படும் அன்றாட சேதத்தை சமாளிக்க உதவுகின்றன.

செர்ரி பழம் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தத்தையும் பெருமளவில் குறைக்கிறது.

செர்ரி பழம் சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது. சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

செர்ரி பழத்தில் வைட்டமின் ‘ஈ’ நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் கண்பார்வை நலத்திற்கு மிகவும் அவசியமானதாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து, கண்பார்வை திறனை மேம்படுத்துகிறது.

செர்ரியில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடை இழப்பிற்கு ஏற்றதாகும்.

தினமும் துளசி டீ குடித்தால் மருத்துவரைத் தேடவேண்டாம்!