சிக்கனா.. மட்டனா..? அடிக்கடி சாப்பிட எது சிறந்தது?

தினத்தந்தி

ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி இரண்டிலுமே புரதம் இருக்கிறது என்றாலும் எதன் புரதம் சிறந்தது, எதனை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.

credit: freepik

ஆட்டிறைச்சி கொழுப்பை உட்கொள்வது அதிக கலோரிகள் உடலில் சேருவதற்கு வழிவகுக்கும். அத்துடன் குளுக்கோஸ், டிரைகிளிசரைடுகள், கொழுப்பு இவற்றின் செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

credit: freepik

புரதத்தை கணக்கிடும்போது ஆட்டிறைச்சியில் கொழுப்பின் அளவே அதிகமாக இருக்கிறது. கோழி இறைச்சியை பொறுத்தமட்டில், மார்பகங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக இறக்கைகள், தொடைகளில் அதிக கலோரிகள் உள்ளடங்கி இருக்கும்.

credit: freepik

கோழி இறைச்சியை விட ஆட்டிறைச்சியில்தான் கலோரிகள் அதிகம். ஆட்டிறைச்சியில் கொழுப்பின் அளவு அதிகம் இருப்பதுதான் அதற்கு காரணம்.

credit: freepik

அதாவது 100 கிராம் ஆட்டிறைச்சியில் 230 முதல் 300 வரை கலோரிகள் இருக்கும். ஆனால் கோழி இறைச்சியின் மார்பு பகுதியில் 165 கலோரிகளே இருக்கும்.

credit: freepik

கோழி இறைச்சியில் மெலிந்த புரதம் காணப்படும். அதிக கொழுப்பு இருக்காது. இது உணவு கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும் கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவே உள்ளது.

credit: freepik

எனவே, ஆரோக்கிய நன்மைகளை பொறுத்தவரை ஆட்டிறைச்சியை விட கோழி இறைச்சி முதன்மையானது. இருப்பினும் இரண்டையும் மிதமான அளவிலேயே சாப்பிடுவது நல்லது. அடிக்கடி சாப்பிடுவதற்கு கோழி இறைச்சி ஏற்றது.

credit: freepik
கோடைகாலத்தில் கிடைக்கும் வில்வம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?