பாஜக அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.. கடைசி 24 மணி நேரத்தில் என்ன நடந்தது?

தினத்தந்தி

✦ திருப்பூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை. காவலர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கான புதிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் விஜய்

✦ கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

✦ நாட்டை பற்றியோ, மக்களை பற்றியோ சிந்திக்காமல் ஓட்டை பற்றியே கவலைப்படும் கூட்டம் இது. எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். உலகத்தின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் - சீமான்

✦ ஜனநாயகன் படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் தரப்பு ஒத்துழைப்பு தர முடிவு; தொடர்ந்து இன்று ஓடிடி நிறுவனத்துடன் தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

✦ தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,320-க்கும் விற்பனை!

✦ பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார்!

✦ பீகார் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு; பீகாரில் முதல்முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக

✦ தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது - விஜய்

✦ தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மைதா பரோட்டா: சுவையா? சுகாதாரமா?