மைதா பரோட்டா: சுவையா? சுகாதாரமா?

தினத்தந்தி

பரோட்டா அதிகமாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கானது. ஏனெனில் இது மைதாவால் தயாரிக்கப்படுகிறது.

மைதா என்பது கோதுமையை சுத்திகரிக்கும் போது அதன் தவிடு நீக்கப்பட்டு, விதை கூழ் தசையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு சுத்திகரிக்கப்பட்ட மாவாகும்.

ஒரு கப் மைதாவில் சுமார் 496 கலோரிகளும், 107 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. பரோட்டாவின் சர்க்கரை உயர்தல் குறியீடு (Glycemic Index) சுமார் 71 ஆகும்.

செரிமான பிரச்சனைகள்: மைதா மாவில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், பரோட்டா சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது அஜீரணம் மற்றும் வயிற்று வலிக்கு வழிவகுக்கும்.

உடல் எடை அதிகரிப்பு: பரோட்டா அதிக கலோரி மற்றும் கொழுப்புச் சத்து கொண்டது. இதை அடிக்கடி சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கலாம்.

இதய நோய் அபாயம்: பரோட்டாவில் உள்ள அதிக கொழுப்புச் சத்து, இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

நீரிழிவு அபாயம்: அதிகமாக பரோட்டா சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தி, நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

பரோட்டா சாப்பிடுவதை குறைப்பது உங்கள் உடல்நலத்திற்கு நல்லது. சாப்பிட விரும்பினால், மைதா பரோட்டாவிற்கு பதிலாக கோதுமை பரோட்டாவை தேர்வு செய்வது சிறந்தது.

மாம்பழம் சீசன் தொடங்கி விட்டது....ஆனால் இரவில் மட்டும் அதிகம் சாப்பிடாதீங்க!