தினத்தந்தி
பித்தளை - இதில் இருக்கும் துத்தநாகம் உடலில் இருக்கும் செல்களை பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ளும். வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்தும். கூந்தல் முடி, சருமத்துக்கும் நன்மை தரும்.
அதேவேளையில் எலுமிச்சை சாறையோ, அமிலத்தன்மை கொண்ட பானங்களையோ அதில் ஊற்றக்கூடாது. ஏனெனில் அமிலம் பித்தளையுடன் வினைபுரிந்து உடலுக்கு கேடு விளைவிக்கும்.
களிமண்: இயற்கையாகவே தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தன்மை களிமண் பாத்திரங்களுக்கு உண்டு. உடலில் அமில காரத்தன்மையை சமநிலைப்படுத்தும். பி.எச். அளவை சீராக பராமரிக்க உதவும்.
களிமண் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நீரில் மெக்னீசியம், கால்சியம் உள்ளிட்ட தாதுக்களின் பங்களிப்பும் கூடும். நவீன கண்ணாடி, பிளாஸ்டிக் பாட்டில்களால் கொடுக்க முடியாத நறுமணத்தை களிமண் பாத்திரத்தில் ஊற்றப்படும் நீர் அளிக்கும்.
வெள்ளி - குளிர்ச்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டது வெள்ளி. பல நூற்றாண்டுகளாக இதன் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளி அயனிகள் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் துணை புரியும்.
வெள்ளி டம்ளரில் நீர் ஊற்றி வைப்பது குளிர்ச்சியையும், புத் துணர்ச்சியையும் உணர வைக்கும். பழங்காலத்தில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது.
செம்பு - தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை இயற்கையாகவே அழிக்க செம்பு உதவும். செம்பு டம்ளரில் உள்ள தண்ணீரை குடிப்பது செரிமானத்தை ஊக்குவிக்கும். தைராய்டு செயல்பாட்டை சமநிலைப்படுத்தும்.
மேலும் இது கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும். மெலனின் உற்பத்தியை ஒழுங்குபடுத்தவும், சருமத்தை மேம்படுத்தவும், முன்கூட்டியே முடி நரைப்பதை தடுக்கவும் உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.