கோடையில் குளிர்ந்த நீர் – கவனிக்க வேண்டியவை!

தினத்தந்தி

எந்தப் பிரச்சனைகளையும் தவிர்க்க, பெரும்பாலான நேரங்களில் சாதாரண அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரைக் குடிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

வெப்பநிலை எவ்வளவு சூடாக இருந்தாலும், குளிர்ச்சியான தண்ணீரைக் குடிக்கும் பழக்கத்தை ஆயுர்வேதம் தவிர்க்கச் சொல்கிறது. கோடைக்காலத்தில் குளிர் நீரைக் குடிப்பதால் ஏற்படும் தீய விளைவுகள் பின்வருமாறு:

நாம் குளிர்ந்த நீரைக் குடிக்கும்போது, அது உடல் வெப்பநிலையுடன் ஒத்துப்போகாமல், வயிற்றில் உள்ள உணவைச் செரிப்பதை கடினமாக்குகிறது.

குளிர்ந்த நீர் குடிப்பதால் வேகஸ் நரம்பு தூண்டப்பட்டு, இதயத் துடிப்பு சிறிதளவு குறையலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

அதிகப்படியான குளிர் பானங்களை அருந்துவதால் ‘மூளை உறைதல்’ என்ற பிரச்சனை ஏற்படலாம். பனிக்கட்டி நீர் அல்லது ஐஸ்கிரீமை அதிகமாக உட்கொள்வதால் இது நிகழ்கிறது.

குளிர்ந்த நீரைக் குடிப்பதால் குடல் சுருங்கி, உணவு உறைந்து, மலச்சிக்கல் ஏற்படலாம்.

குளிர்ந்த நீர் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பைக் கடினமாக்கி, அதை கரைப்பதில் சிக்கல் ஏற்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்க நினைத்தால், குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.

இது தொண்டை வலி மற்றும் மூக்கடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. குளிர்ந்த நீரைக் குடிப்பதால், குறிப்பாக உணவுக்குப் பிறகு, சுவாசப் பாதையில் அதிகப்படியான சளி உருவாகலாம்.

கோடையில் முலாம்பழம் தவறாமல் சாப்பிடுங்கள்… இதோ காரணங்கள்!