தினத்தந்தி
முலாம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. இந்த கோடைக்காலப் பழத்தில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன. மேலும் நார்ச்சத்து, வைட்டமின் A, போலேட், பொட்டாசியம், புரதம் மற்றும் வைட்டமின் C ஆகியவை நிறைந்துள்ளன.
முலாம்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. இது உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
முலாம்பழத்தில் மிகக் குறைந்த அளவு கொழுப்பு சத்தும், அதிகளவு பொட்டாசியம் சத்தும் உள்ளது. மேலும் இந்த பழம் நம் உடலால் எளிதில் ஜீரணிக்கக்கூடிய நல்ல கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளது. அதன் விதைகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது எளிதில் ஜீரணமாகிறது.
முலாம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுப் புண்களை நாளடைவில் சரி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் வயிற்று கோளாறுகள், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கிறது.
முலாம்பழத்தில் அதிக அளவு வைட்டமின் A சத்து உள்ளது. இது நம் கண்களின் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
முலாம்பழத்தில் உள்ள ஆக்சலேட் (Oxalate) என்ற அமிலம் சிறுநீரகப் பிரச்சனைகளில் சிலவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.
முலாம்பழத்தில் அதிக அளவு ஃபோலேட் உள்ளதால், உடலில் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்களில் நீர் பிடிப்பு பிரச்சனை குறைய உதவுகிறது.
முலாம்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுத்தப்படுத்த உதவுகின்றன. மேலும் இதில் சருமத்திற்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும் சத்துகளும் உள்ளன. இதனை உணவில் சேர்ப்பது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.