ஒரு சில சமையல் குறிப்புகள்.!

தினத்தந்தி

தேங்காய் மூடியை தண்ணீரில் மூழ்க வைத்திருந்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.

பயிறு வகைகளை புழு, பூச்சி சேதப்படுத்தாமல் இருக்க விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைக்கவும்.

எந்த சட்னி செய்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணம் கமகமக்கும்.

தோசை சுடும்போது வாசனையால் ஊரையே ஈர்க்க வேண்டுமா? தோசை வார்க்கும் முன் தோசைக்கல்லில் சிறிது நல்லெண்ணெய் தேய்க்கவும்.

நெய் 'கமகம'வென மணக்கணுமா? நெய் ஜாடியில் சிறிதளவு வெல்லம் போட்டு வைக்கவும்.

இட்லி மல்லிகைப்பூ போல் இருக்க இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் சேர்க்கவும்.

முறுக்கு, சீடைக்கு மாவை வெந்நீர் ஊற்றி பிசைந்து பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

தேங்காய் துவையல் அரைக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

பச்சரிசி தோசை அரைக்கும் போது கூடவே நாலைந்து ஓம இலைகளையும் சேர்த்து அரைத்தால் தோசை வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். ஓமம் குளிர் காலத்தில் நல்ல மருந்தாகும்.

மூட்டு வலிக்கு முடிவு கட்ட இந்த உணவுகளை சாப்பிடுங்க!