மூட்டு வலிக்கு முடிவு கட்ட இந்த உணவுகளை சாப்பிடுங்க!

தினத்தந்தி

மீன்கள் - மத்தி, கானாங்கெளுத்தி போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இது வீக்கத்தை குறைக்க மற்றும் எலும்பு மூட்டு வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது.

credit: freepik

பச்சை இலை காய்கறிகள் - கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் கே சத்து நிறைந்துள்ளது. எலும்பு வலிமை மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை காக்கிறது.

credit: freepik

சியா, ஆளி விதை - ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்தவை; அவற்றின் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மூட்டு இறுக்கம், வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும்.

credit: freepik

பெர்ரி - ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பேரி ஆகியவை வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது. இதில் உள்ள வலுவான ஆன்டிஆக்ஸிடன்டுகள், மூட்டு திசுக்களை பாதுகாக்கும்.

credit: freepik

பாதாம், வால்நட்ஸ் - ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்தவை; இவை மூட்டுகளை வலுப்படுத்தவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

credit: freepik

இஞ்சி - இஞ்சியில் இயற்கையாகேவே அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மூட்டு வலியை போக்க மிகச்சிறந்த உணவாகும்.

credit: freepik

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - இதில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன, இது எலும்பு அடர்த்தியை அதிகரித்து மூட்டு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது,

credit: freepik

எலும்பு சூப்பில் உள்ள அமினோ அமிலங்கள், கொலாஜன் மற்றும் மினரல்கள் உள்ளது. இது மூட்டுக்களைச் சுற்றியுள்ள திசுக்களை வலுப்படுத்தி, மூட்டு இறுக்கத்தைப் போக்க உதவுகின்றன.

credit: freepik
உலர் பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!