தினத்தந்தி
அரிசி களைந்த இரண்டாவது நீரில் சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கை வேகவைத்தால் அதன் அரிப்புத்தன்மை குறையும்.
வத்தக்குழம்பு கொதித்த பிறகு சிறிதளவு வெல்லம் சேர்த்தால் சுவை மேலும் அதிகரிக்கும்.
உப்புமா செய்யும்போது சிறிது புளித்த தயிர் சேர்த்தால் தனித்துவமான சுவை கிடைக்கும்.
முருங்கை இலையை எண்ணெயில் பொரித்து, மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து பொடி செய்து நெய் சாதத்துடன் சாப்பிடலாம்.
எலுமிச்சை சாதம் செய்யும்போது சிறிது துருவிய மாங்காய் சேர்த்தால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.
அப்பம் மாவில் தேங்காய், வெல்லத்துடன் அன்னாசிப்பழம் சேர்த்து அரைத்தால் ருசி அதிகரிக்கும்.
வேகவைத்த கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, சாட் மசாலா, எலுமிச்சைச்சாறு சேர்த்து சுண்டல் செய்தால் சுவையாக இருக்கும்.
அப்பளத்தை மடித்து பொரித்தால் குறைந்த எண்ணெயிலேயே எளிதாக பொரிக்கலாம்.
தேன்குழல் மாவில் வறுத்த பச்சரிசி சேர்த்து அரைத்தால் பிசுபிசுப்பின்றி நன்றாக பிழிய வரும்.