தினத்தந்தி
தேவையான பொருட்கள்: அரைக்கீரை - 1 கட்டு, எண்ணெய் - ¼ குழிக்கரண்டி, வெங்காயம் - 150 கிராம், தக்காளி - 2, உப்பு - தேவையான அளவு, துவரம்பருப்பு - ½ ஆழாக்கு, கடுகு - சிறிதளவு, உளுந்தம்பருப்பு - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.
வறுத்து அரைக்க: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், வெந்தயம் - ½ டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8.
செய்முறை :தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வறுத்து அறைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
துவரம்பருப்பை நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளவும். அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளியை சேர்த்து நன்றாக குழைய வதக்கவும்.
அதன்பின் அரைக்கீரையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். கீரை வெந்ததும் மசித்த துவரம்பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக வறுத்து அரைத்த பொடியை தூவி கிளறி இறக்கினால் சுவையான அரைக்கீரை பருப்பு குழம்பு தயார்