குழந்தைகளுக்கு பிடித்த முந்திரி பக்கோடா!

தினத்தந்தி

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சுவையான முந்திரி பக்கோடா செய்து கொடுக்கலாம். மொறுமொறுப்பான இந்த முந்திரி பக்கோடாவை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம்.

தேவையான பொருட்கள்; கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 3 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் – 3, புதினா – சிறிதளவு, முழு முந்திரி – 100 கிராம், உப்பு – தேவையான அளவு, நெய் – 1 மேசைக்கரண்டி, எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை; பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புதினாவைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாகத் தயாரிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய பச்சை மிளகாய், புதினா விழுது, முந்திரி மற்றும் உப்பு சேர்க்கவும்.

அதனுடன் நெய் சேர்த்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து உதிரியாகப் பிசைந்து கொள்ளவும். மாவு மிகவும் தளர்வாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, பிசைந்து வைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்கோடா வடிவில் கிள்ளிப் போடவும்.

பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை பொரித்தெடுக்கவும். பின்னர் எண்ணெயை நன்கு வடித்து ஆறவிடவும்.

சுவையான மொறுமொறுப்பான முந்திரி பக்கோடா தயார். இதனை தேநீருடன் மாலை நேரச் சிற்றுண்டியாகப் பரிமாறலாம்.

குறிப்பு: பக்கோடா நன்றாக ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

சத்துக்கள் நிறைந்த வால்நட் ராகி சாக்லேட் கேக் செய்வது எப்படி?