தினத்தந்தி
செய்முறை; பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் துருவி வைத்துக்கொள்ளவும்.
காலிஃப்ளவரைப் பெரிய துண்டுகளாக வெட்டி, உப்பு கலந்த தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் நன்றாகச் சுத்தம் செய்து தண்ணீரை வடித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வெள்ளை ரவை, மிளகாய்த்தூள், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, ஓமம் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
இந்தக் கலவையில் ஒரு மேசைக்கரண்டி சூடான கடலை எண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றி, காலிஃப்ளவரில் நன்றாகப் பிடிக்கும் அளவுக்குக் கெட்டியான மாவாகக் கரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் பொரிப்பதற்குத் தேவையான கடலை எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை மாவில் நன்றாகத் தோய்த்து, சூடான எண்ணெயில் மெதுவாகப் போடவும்.
போண்டாவை மிதமான தீயில் திருப்பித் திருப்பிப் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் எண்ணெயை வடித்து, சூடாகப் பரிமாறவும். சுவையான காலிஃப்ளவர் போண்டா தயார்!